Home நாடு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்குமாறு கிம்மா போலீசில் புகார்

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்குமாறு கிம்மா போலீசில் புகார்

995
0
SHARE
Ad

கோலாலம்பூர்,ஜன-25 SLIDER KAMALஅதிகமான பொருட் செலவில் மிகவும் பிரமாண்டமான முறையில் வெளி வந்துள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறி கிம்மா இளைஞர் பிரிவுத்தலைவர் ஹரிஸ் சிராஜுதீன் டாங் வாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இஸ்லாத்திற்கு எதிரான பல விஷயங்கள் இப்படத்தில் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தன் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத்திலுள்ள சில காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்றும், இப்படத்தை பார்க்கும் மற்ற இன சகோதரர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்ள வழி வகுக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இத்திரைப்படத்தை உடனடியாக இந்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்றும், அதே வேளை உள்துறை அமைச்சு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரிஸ் சிராஜுதீன் கேட்டுக் கொண்டார்.