Home சமயம் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

1851
0
SHARE
Ad

 Untitled-1

கோலாலம்பூர்,ஏப்ரல் 14 – சித்திரை மாதம் முதல் நாள், புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய காலையில், உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பாக, உள்ளம் கனிந்த “சித்திரைப் புத்தாண்டு” நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சித்திரை மாதத்தின் சிறப்பு என்ன?

#TamilSchoolmychoice

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த தமிழ்’ என்னும் பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை மாதம் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த இனிய நாளில், நமது வீட்டிலுள்ள வயதில் மூத்தவர்களிடமிருந்து ஆசிகளைப் பெறுவதும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை செய்வோர்  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.

மேலும் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் தொடங்கி  மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

பண்டைய காலங்களில், குடும்பத் தலைவிகள் தமிழ் வருடப் பிறப்பு அன்று, அடுப்பு மூட்டுவதில்  ஒரு தனி சிறப்பைக் கடை பிடித்து வந்தனர். அதாவது அந்த ஆண்டு இறுதிவரை சமைப்பதற்காகப் பயன்படுத்திய மண் பானைகள் அனைத்தையும் களைந்து விட்டு, வித விதமான வடிவில் சந்தையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புதுப் பானைகளை  ஆவலோடு வாங்குவார்கள்.

அதன் பிறகு சுபமுகூர்த்தத்தில் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து, அவ்வருடம் முழுவதும் உணவிற்கு  பஞ்சம் ஏதும் வந்துவிடக் கூடாது என்று கடவுளை பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைப்பர்.

மேலும், புதுவருடம் அன்று புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வது, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுத்து மகிழ்வது போன்ற பழக்கங்களை தமிழர்களாகிய நாம் ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறோம்.