Home அரசியல் மாற்றத்தையும், மக்களுக்கு முன்னேற்றத்தையும் பக்காத்தானின் திட்டங்கள்தான் கொண்டுவர முடியும் – சேவியர் ஜெயகுமார் அறிக்கை

மாற்றத்தையும், மக்களுக்கு முன்னேற்றத்தையும் பக்காத்தானின் திட்டங்கள்தான் கொண்டுவர முடியும் – சேவியர் ஜெயகுமார் அறிக்கை

553
0
SHARE
Ad

 Xavier-Featureஏப்ரல் 13 – மக்கள் கூட்டணி பொதுத் தேர்தல் அறிக்கை மூலம் முன்மொழிந்துள்ள பரிந்துரைகளையும், திட்டங்களையும்  செயலாக்கினால் அதன் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும் என்று   சிலாங்கூர்மாநிலஆட்சிக்குழுஉறுப்பினரும் நடப்பு ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்சேவியர்ஜெயக்குமார் இன்று விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

தனது பத்திரிக்கை அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது;

“ஐந்துஆண்டுகளுக்குமுன்நாட்டில் சில மாநிலங்களில் சிறிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த நீங்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு எவ்வளவு நேர்மையாக, உண்மையாக மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அதை செய்தோம். குறிப்பாக, சிலாங்கூர் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவையாற்ற வழங்கிய வாய்ப்பில் நல்ல பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.”

“நிர்வாகத்துறையில் புதிய அனுபவங்களைப் பெற்ற நாங்கள் இந்த மாநிலத்திடம் உள்ள சிறு அதிகாரத்தின் வழி மிகச் சிறிய 160 கோடி வெள்ளி வரவு செலவு திட்டத்தின் வழி மக்கள் நலன் போற்றும் பல திட்டங்களை நிறைவேற்றினோம்”.

“மத்திய அரசின் பரந்த அதிகாரம் மற்றும்  251,600 கோடி வெள்ளி மொத்தப் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால் சிலாங்கூர் மாநிலப் பட்ஜெட் 0.00063 சதவீதம் என்பது தெரியும். அதாவது 160 விழுக்காடு சிறியது. ஐந்தே ஆண்டில்  இம் மாநிலத்தின் மொத்த வரவும் கையிருப்பும் கூடி நிர்வாகச் செலவும் ஊழலும்  கட்டுப்படுத்தப் பட்டதால் 40 விழுக்காடு உபரி வருமானம் கிட்டியுள்ளது.”

அதனைப் பயன்படுத்தி மக்களுக்குப்  பல புதிய திட்டங்களை இம்மாநில  அரசால் வழங்க முடிகிறது. ஆனால் இப்படிப்பட்ட பணப் பலம் கொண்ட ஒரு தேசத்தில் நமது ஜனத் தொகையுடன் ஒப்பிட்டு உலக நாடுகளைக் கவனித்தால், இந்த நாட்டின் வருமானம் எப்படியோ, எங்கோ  ஆவியாக மறைவதை உணர முடிகிறது.”

“ஆனால்  எல்லாவற்றிலும் ரகசியக் காப்பு சட்டங்களை வைத்து அரசாங்க முறைகேடுகளை, ஊழலை மக்களிடம் இருந்து  மறைக்கும் ஒரு அரசாங்கம் கடந்த 56 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது என்றால் மலேசியாவைத் தவிர வேறு எந்த நாடாக இருக்க முடியும்?” என்றும் சேவியர் ஜெயகுமார் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறைந்த மாத வருமானம்

“இந்தச் செல்வம் கொழிக்கும் பூமியில் 40 விழுக்காடு மக்களின்  குடும்ப வருமானம் 1500 வெள்ளிக்கும் குறைவாக உள்ளது.”

 “இந்தத் தேசத்தின் 34 விழுக்காட்டு தொழிலாளர்கள்  மாதம் 700 வெள்ளிக்குக் குறைவான மாத வருமானத்தைப் பெறுகின்றனர்.”

நமது நாட்டில் 30 விழுக்காட்டுக்கும்  குறைவான மக்களே  உயர்கல்வியைப் பெற முடிகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் நம்மை விடப் பின் தங்கியிருந்த  தென் கொரியர்கள் இன்று 96.1 சதவீதத்தினர்  உயர்கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் நம் நாட்டிலோ, ஏழ்மையில் எல்லா இன மக்களும் அவதிப்படுகின்றனர். அதனால் நாம் நமது தேசத்தைக் கடும் சுரண்டலிலிருந்து காப்பாற்ற வேண்டும். நாம் நமது சகாக்களை, நமது சமுதாயத்தை  ஏழ்மையிலிருந்து மீட்க வேண்டும்.

எந்தத் தேசத்தில் வறுமையும் இல்லாமையும்  அதிகரிக்கிறதோ  அங்கே  அமைதி நிலவாது.”

“ஆக அந்த அடிப்படையிலேயே பக்காத்தான் ராயாட் வெளியிட்ட தேர்தல் அறிக்கை உள்ளது. இந்நாட்டில் நிலவும் பல பலவீனங்களை மேம்படுத்த பக்காத்தான் ராயாட்டின் தேர்தல் கொள்கை அறிக்கை பலருக்கு கிடைக்காததால் பல வித சந்தேகங்கள் உலாவி வருகின்றது. அந்த அறிக்கையின்  சுருக்கத்தை அதன் முக்கிய அம்சங்களை இங்கு  வழங்குகிறோம்:- 

பக்காத்தானின் ’’மக்கள் தேர்தல் கொள்கை அறிக்கையின்’’  தமிழ் பிரதியின் சுருக்கம்:-

 

பக்காத்தானேமக்களின்நம்பிக்கை

மக்கள்நல்வாழ்வு

·         எண்ணெய்விலைகுறைப்பு

·         மின்கட்டணம்குறைப்பு

·         தண்ணீர்கட்டணக்குறைப்பு

·         டோல்கட்டணத்தைஅகற்றுவது

·         ஆதிக்கப்போக்கைஅகற்றுவது

·         வாகனவிலையைக்குறைப்பது

·         150,000 வாங்கும்சக்திகேற்றவீடுகள்கட்டுதல்

·         தோட்டத்தொழிலாளர்கள்வீடுகள்  உட்படஅனைத்துமக்களின்   தேவைகளைக்கவனத்தில்கொண்டுமுதல்வருடத்தில்வாங்கும்தகுதிகேற்றவீடுகளைகட்டமுதலாவதுஆண்டில் 500 கோடிரிங்கிட்டையும்இரண்டாம்ஆண்டுமுதல்ஐந்தாம்ஆண்டுவரைஆண்டுக்கு 200 கோடிரிங்கிட்டையும்  ஒதுக்குதல்.

·         அனைவருக்கும்இலவசகல்வி, PTPTN கடன்கள் அகற்றுதல்

·         AES –அதாவது சாலை சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கருவிகள் அகற்றப்படும், AES சம்மன்ரத்துசெய்யப்படும்

·         பெல்டாகுடியேற்றவாசிகளுக்குநீதி

·         மக்களுக்குஎதிரானகொடுமையானசட்டங்களைஅகற்றிநீதியைநிலைநாட்டுதல்

·         அரசுமருத்துவமனையில்அனைத்துமக்களுக்கும்இலவசமருத்துவம்வழங்குவதோடு 2&3-ஆம்வகுப்புகட்டணம்அகற்றுதல்.

·         ஏழைகள்மற்றும்மாற்றுதிறனாளிகளுக்குசமூகநலத்துறைவழிவழங்கப்படும்சமூகநலத்துறைஉதவிகள்மாதத்திற்கு 300 ரிங்கிட்டிலிருந்து  550 ரிங்கிட்டாகஉயர்த்துதல்.

மக்கள்சகோதரத்துவம்

 ·         சமயங்கள்மற்றும்இஸ்லாம்அமைப்பின்மறுமலர்ச்சி

·         கலாச்சாரமேதேசியஒற்றுமைக்குஅடித்தளம்

·         தேசியமகளிர்சேமநிதி: கணவன்மார்கள்தங்களின்சம்பளவிகிதாசாரத்திற்கேற்ப (மாதம் RM10 முதல் RM100 வரை) குறிப்பிட்டதொகையைஇந்தசேமநிதியில்சேர்ப்பதுசட்டப்படிகட்டாயமாக்கப்படும்.

·         மூத்தகுடிமக்களுக்குஉதவி: 60 வயதுக்குமேற்பட்டமூத்தகுடிமக்களின்சுமையைக்குறைக்கும்வகையில்ஆண்டுக்கு 1,000 வெள்ளிபோனசாகவழங்கப்படும்.

·         எரிபொருள்உற்பத்திசெய்யும்மாநிலங்கள் 20% உரிமத்தொகைபெறவுள்ளஅதன்உரிமையை  நிலைநிறுத்துவது.

·         தேசியமொழியின்மேன்மைகட்டிக்காக்கப்பட்டு, தாய்மொழியின்உரிமைக்குஉத்தரவாதம்அளிக்கப்பட்டுஆங்கிலமொழியின்தரம்மேம்படுத்தப்படும்.

·         நாடுமுழுவதும்மக்களால்நடத்தப்படும்பள்ளிகளுக்கு, தமிழ்ப்பள்ளிகள்உட்பட 1854 பள்ளிகளுக்கு (தற்போதுவழங்கப்படும்நிர்வாகச்செலவினத்திற்கானமானியம்தவிர்த்து) கூடுதல்ஒதுக்கீடுவழங்கப்படும்இதற்காக 22 கோடிவெள்ளிஒதுக்கீடுசெய்யப்படும்.

·         கூட்டரசில்சபாசரவாவுக்குவழங்கப்பட்டஅந்தஸ்துக்குமதிப்பளித்தல்

·         கூச்சிங்பிரகடனத்தின்அம்சங்களுக்கேற்பசபாசரவாமக்களுக்குதிட்டங்கள்உடனடியாகஅமல்படுத்தப்படும்.

·         மலேசியஇந்தியர்கள்உட்பட  எல்லாமலேசியர்களும்  எதிர்நோக்கும்  பிரஜாஉரிமைபிரச்சனைக்குப்புத்ராஜெயாவைக்கைபற்றியநூறு  நாட்களில்தீர்வுகாண்பது.

·         பூர்வக்குடியினரின்நிலஉரிமைசமூகநலன்பாதுகாக்கப்படும்

·         எரிபொருள்உற்பத்திசெய்யும்மாநிலங்களுக்கான (Royalty) உரிமத்தொகை 5% லிருந்து 20% உயர்த்தப்படும்.

மக்கள்பொருளாதாரம்

·         ஐந்துஆண்டுகளில்  பத்துலட்சம்அந்நியத்தொழிலாளர்களைக்கட்டங் கட்டமாககுறைப்பதன்மூலம் 10 லட்சம்புதியவேலைவாய்ப்புகளைமலேசியர்களுக்குஉருவாக்குதல்

·         குறைந்தபட்சசம்பளத்திட்டத்தின்கீழ்ஒவ்வொருதொழிலாளரும்மாதம்ஒன்றுக்குகுறைந்தபட்சம்ரி.. 1,100சம்பளமாகப்பெறுவர்.

·         மேற்கல்விபெறாத 10 லட்சம்இளையோருக்குமக்கள்முன்னோடித்திட்டத்தின்வாயிலாகடிப்ளோமாவரைக்குமானதொழில்திறன்பயிற்சிகள்வழங்கப்படும்.

·         கைத்தொழில்மற்றும்தொழில்திறன்பயிற்சிகளுக்கு 5 பல்கலைக்கழகங்கள், நடப்புபொருளாதாரதேவைக்கேற்ப 25 தொழில்திறன்பள்ளிகள்நிர்மாணித்தல்

·         கல்விமறுசீரமைப்பின்வழிபொருளாதாரமேம்பாடு

·         தொழிற்சங்கம்முதலாளிமார்கள்அரசாங்கம்இடையிலானவிவேகபங்காளித்துவத்தைகலாச்சாரமாக்குவது

·         IKS உதவித்தொகைமற்றும்ஊக்குவிப்புமறுசீரமைப்பு

·         26 விழுக்காடுவரிசெலுத்தவேண்டியவருமானஇலக்கான 100,000கூடுதலானவருமானத்தொகைரி.. 400,000 ஆகஉயர்த்தப்படும்.

·         மக்களின்பாதுகாப்புமற்றும்சுற்றுச்சூழல்பாதுகாப்பைஉறுதிசெய்வதற்காகபெங்கேராங்இகிலுள்ளஅனைத்துரெப்பிட்திட்டங்களும்மறுஆய்வுசெய்யும்.

·         இராணுவவீரர்களின்பொருளாதாரம்சமூகநலனைப்பாதுகாத்தல்

·         டாக்சிதொழில்முனைவோரைவலுப்படுத்துதல்

·         ஆராய்ச்சி & மேம்பாட்டிற்குமொத்தஉள்நாட்டுஉற்பத்தியில் 5% முதலீடு

·         மாற்றுத்திறனாளிகளுக்குஇலவசபொதுபோக்குவரத்துவசதி, கிள்ளான்பள்ளத்தாக்குப்பகுதியில்பஸ்களின்எண்ணிக்கையும்பயணத்தடங்களின்எண்ணிக்கையும்இரட்டிப்பாகஆகும்வகையில்ஆட்சிக்குவந்தமுதலாம்ஆண்டில் 200 கோடிரிங்கிட்ஒதுக்கப்படும்.

·         ஆதிக்கப்போக்கைத்தகர்த்தெறிந்துபோட்டித்தன்மையைஅதிகரிப்பதில்பக்காத்தான்ரக்யாட்டின்  பொருளாதாரஅணுகுமுறைகவனம்செலுத்தும். இதன்வழிவிலைவாசியைக்குறைத்துபொருளாதாரத்தின்ஆக்கத்திறனைவலுப்படுத்தமுடியும்.மேலும்பலபுதியதொழில்முனைவோரின்உருவாக்கத்திற்குஇதுவழிவகுக்கும்.

மக்கள்அரசாங்கம்

·         இஸ்லாம்அல்லாதசமயங்கள்மற்றும்இஸ்லாம்அமைப்பின்   மறுமலர்ச்சி

·         அரசுப்பணியாளர்களுக்கானபுதியசம்பளமற்றும்சேவைத்திட்டம்

·         தூய்மையான, நீதியான, வெளிப்படையானத்தேர்தல்

·         தேர்தல்ஆணையம், போலீஸ்துறைமற்றும்போலீஸ்முறைகேடுகள்  மீதான  சுயேச்சைவிசாரணைஆணையம்ஆகியவற்றில்மறுசீரமைப்பு

·         நாடாளுமன்றமறுமலர்ச்சி

·         ஊடகசுதந்திரமும்ஊடகவியலாளர்களின்நம்பிக்கையைமீட்டுகொடுத்தல்

·         AUKU-வைஅகற்றுவதோடுகல்விசுதந்திரத்தையும்உறுதிப்படுத்துதல்

·         மக்களுக்குஎதிரானஅனைத்துகொடூரசட்டங்களும்அகற்றப்படும்

·         நாட்டில்ஊழலைவேரறுக்கும்கொள்கை (DEBARAN) அமல்படுத்தப்பட்டுஒருங்கிணைந்தஆக்ககரமானஅணுகுமுறையோடு  லஞ்சத்தைஒழிக்கநடவடிக்கைஎடுக்கப்படும்.

மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மக்கள் கூட்டணியின் முந்தைய கொள்கை ஆவணங்களுடன் பிணைப்பைக் கொண்டுள்ளதால் இந்தத் தேர்தல் அறிக்கையை அந்த முந்தைய ஆவணங்களுடன் சேர்த்துப் படிப்பது உசிதமானதுஎன்றும் சேவியர் தெரிவித்துள்ளார்.

“மக்கள் கூட்டணியின் கூட்டுக் கொள்கை, புக்கு ஜிங்கா, மக்கள் கூட்டணியின் வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்கை அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அம்சங்களையே இந்தத் தேர்தல் அறிக்கையும் உள்ளடக்கியுள்ளது” என்றும் தனது அறிக்கையில் டாக்டர் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.