டோக்கியோ, ஏப்ரல் 13- மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆங் சான் சூகி, 7 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அவர் 1985-ம் ஆண்டுக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து இன்று ஜப்பான் சென்றுள்ளார்.
இவர் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே, வெளியுறவுத்துறை மந்திரி பியுமியோ கிஷிடா மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளில் மியான்மரில் ஜப்பான் அதிகமான முதலீடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தவுள்ளார்.
மேலும் ஜப்பானில் 1985-86-ம் ஆண்டுகளில், பேராசிரியராக இருந்தபோது தங்கியிருந்த கயோடோ பகுதியையும் சூகி பார்வையிட உள்ளார். அங்குள்ள பல்கலைகழகத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.