Home No FB காணொலி : சேவியர் – ஒரு போராளி வீழ்ந்த கதை

காணொலி : சேவியர் – ஒரு போராளி வீழ்ந்த கதை

1010
0
SHARE
Ad

Selliyal Video | Xavier : The fall of a political fighter | 17 March 2021
செல்லியல் காணொலி | சேவியர் : ஒரு போராளி வீழ்ந்த கதை | 17 மார்ச் 2021|

பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராகவும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் சேவியர் ஜெயகுமார்.

துன் மகாதீர் அமைச்சரவையில் நீர், நிலம், இயற்கை வளம் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

#TamilSchoolmychoice

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியோடு இணைந்து போராடியவர். தடம் மாறாதவராக, பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராகவும், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த தேசியக் கூட்டணிக்கு எதிராகவும் தொடர்ந்து எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தவர்.

அப்படிப்பட்ட சேவியர் ஜெயகுமார் கடந்த மார்ச் 13-ஆம் தேதி பாதை மாறி பிகேஆர் கட்சியிலிருந்து விலகி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பிரதமருக்கு ஆதரவு என அறிவித்தார்.

அவர் பிகேஆர் கட்சியிலிருந்து வந்து சேர்ந்த கதையையும், வளர்ந்த கதையையும் இறுதியில் அரசியல் போர்க்களத்தில் நெருக்கடிகள் காரணமாக வீழ்ந்த கதையையும் இந்த காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.