Home One Line P1 சேவியர் ஜெயகுமார் பிகேஆரிலிருந்து வெளியேறினார், தேசிய கூட்டணிக்கு ஆதரவு

சேவியர் ஜெயகுமார் பிகேஆரிலிருந்து வெளியேறினார், தேசிய கூட்டணிக்கு ஆதரவு

992
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார், 1998 முதல் தாம் இணைந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரான, அவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக இருப்பதாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

“நான் எனது தொகுதியில் தொடர்ந்து பணியாற்றுவேன். நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினராக அரசாங்கத்தை ஆதரிப்பேன். கோலா லங்காட் மக்களுக்கு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இரண்டு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், லாரி சங் (ஜுலாவ்) மற்றும் ஸ்டீவன் சோங் ( தெப்ராவ்) ஆகியோர் பிப்ரவரி இறுதியில் கட்சியை விட்டு வெளியேறினர்.