Home One Line P1 கோவை தெற்கில் கமல் போட்டியிடுவது பாதகமாக இருக்காது

கோவை தெற்கில் கமல் போட்டியிடுவது பாதகமாக இருக்காது

748
0
SHARE
Ad

சென்னை: கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவது, பாஜகவிற்கு பாதகமாக அமையாது என்று அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்ட வானதி சீனிவாசன் 36 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றதை முருகன் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது அக்கட்சி, அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பது மேலும் வலுவைத் தரும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நேற்று, கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டபோது, தாம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.