Home One Line P2 இந்தியா உட்பட 4 நாடுகள் ஆசியா முழுவதும் ஒரு பில்லியன் தடுப்பூசிகளை அனுப்பும்

இந்தியா உட்பட 4 நாடுகள் ஆசியா முழுவதும் ஒரு பில்லியன் தடுப்பூசிகளை அனுப்பும்

969
0
SHARE
Ad

புது டில்லி: அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் 2022- ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆசியா முழுவதும் 1 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை அனுப்ப நிதி, உற்பத்தி மற்றும் விநியோக திறன் ஆகியவற்றை செயல்படுத்த ஒப்புக் கொண்டதாக இந்திய வெளியுறவு செயலாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நான்கு நாடுகளின் “குவாட்” குழு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, உலகளாவிய தடுப்பூசிகளை விரிவுபடுத்தவும், தென்கிழக்கு ஆசியாவிலும், உலகெங்கிலும் சீனாவின் வளர்ந்து வரும் தடுப்பூசி இராஜதந்திரத்தை எதிர்க்கவும் அணித்திரட்டியுள்ளன. இப்போது, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் இந்தியாவாகும்.

இந்த ஒத்துழைப்பு அழுத்தமானது மற்றும் மதிப்புமிக்கது என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் நான்கு வழி மெய்நிகர் உச்சமாநாட்டிற்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் கொவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்காக நான்கு நாடுகளும் தங்கள் நிதி ஆதாரங்கள், உற்பத்தி திறன்கள் மற்றும் தளவாட வளங்களை திரட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன,” என்று அவர் கூறினார்.