Home One Line P1 கெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது

கெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது

729
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் மனதை வெல்லும் நோக்கில் செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் மிக முக்கியமான மாநிலமாகக் கருதப்படும் பினாங்கையும் அக்கட்சி மறக்கவில்லை என்று அவர் கூறினார்.

2008 பொதுத் தேர்தலில் கெராக்கான் பினாங்கு மாநிலத்தில் அதன் நான்கு தசாப்த அதிகாரத்தை இழந்தது.

#TamilSchoolmychoice

தொகுதி ஒதுக்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை தேசிய கூட்டணி தலைவர்கள் மன்றத்திடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.

“பிரதமர் மொகிதின் யாசின் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தலை முடித்த பின்னரே தலைவர்கள் மன்றக் கூட்டம் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதே முன்னுரிமை என்பதால், கட்சி குறிப்பான ஓர் இடத்தைக் கேட்காது என்று லாவ் கூறினார்.

“நாங்கள் இனம் சார்ந்த கட்சி அல்ல. நாங்கள் மலேசியாவின் தேவைகளைப் பற்றி விவாதிக்கிறோம், சில இனங்களின் தேவைகளை மட்டும் அல்ல, ” என்று அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் கெராக்கானின் இலக்கைப் பற்றி கூறுகையில், ஓர் இடத்தில் வென்றாலும் கூட, அது கட்சிக்கு 100 விழுக்காடு வெற்றி என்று லாவ் கருதுகிறார்.

2018 பொதுத் தேர்தலில் கெராக்கான் போட்டியிட்ட எந்த இடங்களிலும் வெல்லவில்லை.