Home One Line P1 அன்வார் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்

அன்வார் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சியை வலுவாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்,  ஊழல்வாதிகளுடன் கூட்டு சேர நினைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊழல்வாதிகளை சம்பந்தப்படுத்தக்கூடாது என்று அமானா துணை த்தலைவர் சாலாஹுடின் அயோப், முகமட் அசிஸ் ஜம்மான், சைட் சாதிக், பாரு பியான் மற்றும் செனட்டர் லியூ சின் தோங் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தனர்.

தேசிய கூட்டணி அரசாங்கம், நாடு எதிர்நோக்கும் பொருளாதார, சுகாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை தீர்க்க ஒரு தெளிவான  திட்டத்தை வழங்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 பாதிப்பில்  நாட்டை நிர்வகிப்பதற்கான அதன் திறனையும்,  அர்ப்பணிப்பையும் நிரூபிக்க தேசிய கூட்டணி அரசாங்கம் தவறிவிட்டது. அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ முயற்சிகளை எடுப்பதன்  மூலம் தலைமையை நிரூபிக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.