Home One Line P2 கொவிட்19: தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது

கொவிட்19: தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது

539
0
SHARE
Ad

புது டில்லி: நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 இலட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், அனைத்துலக அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மும்பை, நொய்டா, மற்றும் கொல்கத்தாவில் அதிநவீன கொவிட்19 பரிசோதனை மையங்களை திறந்து வைத்தபோது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் கொவிட்-19 இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு என்றும், அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நமது முன்னணிப் பணியாளர்களின் மகத்தான பங்களிப்பினால் இது சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது. உலகம் நம்மை புகழ்ந்து வருகிறது. நமக்கு புதிய விழிப்புணர்வு அவசியமில்லை.” என்றும் மோடி கூறியுள்ளார்.

“நொய்டா, மும்பை, மற்றும் கொல்கத்தாவில் தற்போது திறக்கப்பட்டுள்ள அதிநவீன பரிசோதனை வசதிகள் மூன்று நகரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10,000 வரை பரிசோதனை திறனை அதிகரிக்கும். இந்த மூன்று நகரங்களும் கொவிட்-19 தொற்று பரவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. ” என்று மோடி கூறியுள்ளார்.