Home One Line P2 ஆஸ்ட்ரோ : அக்டோபர் 12 முதல் 18 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : அக்டோபர் 12 முதல் 18 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

674
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் அக்டோபர் 12-ஆம் தேதி முதற்கொண்டு அக்டோபர் 18-ஆம் தேதி வரையில் ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திங்கள், 12 அக்டோபர்

யார் அவன் (புதிய அத்தியாயங்கள் – 8-12)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

நடிகர்கள்: சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா & குபேன் மகாதேவன்

சஞ்ஜை மற்றும் டேனியல், அமரை மோசமாக நடத்துகின்றனர். நித்தினைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 4-8)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகனேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்

சமர் ரம்யாவையும் அவரது தாயையும் திருமண தேதியுடன் ஆச்சரியப்படுத்துகிறார்.

புதன், 14 அக்டோபர்

டேன்ஜரஸ் கில்லாடி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: அல்லு அர்ஜுன், இலியானா டி க்ரூஸ் & சோனு சூத்

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட பிட்டு என்ற குண்டரை ரவி சந்திக்க நேரிடுகிறது. பிட்டுவின் திட்டத்தைத் காவல்துறையினர் தடுக்க ரவி உதவுகிறார். இறுதியில், பிட்டு ரவியையும் அவரது குடும்பத்தினரையும் அழிக்கத் தீர்மானிக்கிறார்.

வியாழன், 15 அக்டோபர்

தமனி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: தேவா, ஈஸ்வர் ஜி, டாக்டர் செல்வமுத்து, அண்ணாமலை & சுதா

ஒரு முதியவர் புகார் அளித்த பின்னர் காணாமல் போன சிறுமி தொடர்பான வழக்கை காவல் அதிகாரி ஒருவர் விசாரித்து வருகிறார். விசாரணையின் போது, அவர் ஒரு தங்கச் சங்கிலியியைக் கண்டுபிடிக்கையில், தொடர்ச்சியான விசாரணை பல வன்முறைக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கிறது.

ஜெய் மம்மி டி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சன்னி சிங், சோனால்லி செகல், சுப்ரியா பதக் & பூனம் தில்லோன்

அவரவர் தாய்மார்களுக்கு இடையிலான இயக்கவியல் காரணமாக ஒரு ஜோடி சோதனைகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

மீண்டும் ஒரு மரியாதை (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பி.பாரதிராஜா & நட்சத்திரா

தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்யும் ஒரு பெண் தனது மகனால் கைவிடப்பட்ட ஒரு பெரியவருடன் நட்பு கொள்கிறாள். ஒரு கவர்ச்சியான இடத்திற்கு 10 நாள் பயணம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது.

வெள்ளி, 16 அக்டோபர்

மம்மி சேவ் மி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பிரியங்கா உபேந்திரா & யுவினா பார்த்தவி

கணவரின் மரணத்திற்குப் பிறகு பெங்களூரிலிருந்து கோவாவுக்குச் செல்லும்போது 7 மாத கர்ப்பிணித் தாய், பிரியா மற்றும் அவரது 6 வயது மகள் ஆகியோரைச் சுற்றியுள்ள ஒரு உணர்ச்சி திகில் படம்.

சனி, 17 அக்டோபர்

அங்ராக்ஷாக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: சன்னி தியோல், பூஜா பட் & குல்பூஷன் கர்பண்டா

ஒரு பணக்கார அரசியல்வாதி தனது மகள் பிரியாவுக்கு அஜயை மெய்க்காப்பாளராக நியமிக்கிறார். இருப்பினும், பிரியா கடத்தப்பட்டு ஒரு இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதால், அஜய் உண்மையை கண்டுபிடிக்க புறப்படுகிறார்.

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – 13-14)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு  |

ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

அவரின் கும்பல் செய்த காரியத்தை கண்டுபிடித்த பிறகு யுவாவுக்கு மிகுந்த கோபம் வருகிறது. யுவா, நவின் மற்றும் ஆல்வின் ஆகியோர் கல்லறையிலிருந்து தப்பிக்கின்றனர்.

ஞாயிறு, 11 அக்டோபர்

திவானே ஹுய் பாகல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: அக்‌ஷய் குமார், ஷாஹித் கபூர், சுனில் ஷெட்டி, ரிமி சென் &  பரேஷ் ராவல்

ஒரு மனிதன் துபாயில் தனது காதலியைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு பயணத்தைத் தொடங்குகிறார். மேலும், அவளின் அபிமானர்களையும் அறிய தீர்மாணம் கொள்கிறார்.

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 6)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு 

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்

இந்த அத்தியாயத்தில் போட்டியாளர்கள் தங்கள் புகைப்பட திறன்களைக் (photoshoot skills) வெளிபடுத்துவர். மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள், அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை