கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 10) வரையில். கடந்த 24 மணி நேரத்தில் 374 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய எண்ணிக்கையான 354-ஐ விட இது அதிகமாகும்.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் தொடர்ந்து மூன்று இலக்கு எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
73 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,780- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
374 புதிய சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 15,096- ஆக உள்ளது என்று அவர் கூறினார்.
மொத்தம் 4,161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 73 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 28 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
இன்று புதிதாக 3 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 155- ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 6 பேர் இந்த தொற்றால் மரணமுற்றனர்.
சபாவில் அதிகமாக 277 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கெடாவில் 27 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 44 சம்பவங்களும், கோலாலம்பூரில் 6 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
இதற்கிடையில் கொவிட்-19 தொற்று அபாயம் காரணமாக 1 உத்தாமா பேரங்காடியும், டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் மூடப்பட்டது.