Home One Line P1 கொவிட் 19 : 1 உத்தாமா பேரங்காடி, டுரோபிகானா கோல்ப் கிளப் மூடப்படுகின்றன

கொவிட் 19 : 1 உத்தாமா பேரங்காடி, டுரோபிகானா கோல்ப் கிளப் மூடப்படுகின்றன

716
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : இங்குள்ள பண்டார் உத்தாமா பகுதியில் அமைந்திருக்கும் 1 உத்தாமா பேரங்காடியும், அதன் அருகாமையில் உள்ள டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) முதல் கொவிட்-19 அபாயம் காரணமாக மூடப்படவிருக்கிறது.

1 உத்தாமா பேரங்காடியில் இதுவரையில் நான்கு தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன. டுரோபிகானா கோல்ப் கிளப்பில் பணிபுரியும் ஐவருக்கு கொவிட் 19 தொற்று கண்டிருக்கிறது.

மேலும் தொற்றுகள் பரவாமல் இருக்கவும், கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் நோக்கிலும் இந்த இடங்கள் மூடப்படுகின்றன.

#TamilSchoolmychoice

கொவிட் 19 தொற்று கண்டவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் 14, 15 தேதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பரிசோதனைகள் பெட்டாலிங் வட்டார சுகாதார இலாகாவால் நடத்தப்படும்.

இந்தப் பகுதிகளில் கொவிட் 19 அறிகுறிகள் கொண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களுக்குச் சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கிடையில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 7 வரை 1 உத்தாமா பேரங்காடியின் தரைத் தளத்தில் அமைந்துள்ள பார்க்சன் எலிட் கொஸ்மெடிக் (Parkson Elite Cosmetic and Perfumery) வணிக மையத்துக்குச் சென்றவர்களும், செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 30 வரை அங்குள்ள 2-வது தரைத் தளத்தில் உள்ள மேக் சிட்டி (Mac City at level 2)  வணிக மையத்துக்கும் சென்றவர்களும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.