இந்த ஆண்டுக்கான புதிய ஐபோன் எதிர்வரும் அக்டோபர் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
அண்மையில் நடைபெற்ற ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் அனைத்துலக மாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிள் கைக்கெடிகாரங்களின் ஆறாவது மேம்படுத்தப்பட்ட பதிப்பும் இரண்டு புதிய இரக ஐபேட் எனப்படும் கையடக்கக் கருவிளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
புதிய ஐபோன் 12 நேரடியாக 5ஜி தொலைத் தொடர்பு வசதியைக் கொண்டிருக்கும். 5.4 அங்குலம் முதல் 6.4 அங்குலம் அளவிலான குறுக்களவுத் திரையை இந்த புதிய திறன்பேசிகள் கொண்டிருக்கும்.
மூன்று இரகங்களில் இந்த திறன்பேசிகள் வெளியிடப்படும்.
மேலும் செவிகளில் மாட்டிக் கொண்டு கேட்கும் கருவிகளும் அறிமுகம் காணும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய ஐபோன் 12 அறிமுக நிகழ்ச்சி இணையம் வழி அனைத்துலக அளவில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 13-ஆம் தேதி அமெரிக்க பசிபிக் நேரம் காலை 10.00 மணிக்கு இந்த அறிமுக நிகழ்ச்சி தொடங்கும். இதற்கான மலேசிய நேரம் அடுத்த நாள் புதன்கிழமை அக்டோபர் 14 அதிகாலை 1.00 மணியாகும்.