Home One Line P2 ராகா வானொலி : அக்டோபர் 12 முதல் 15 வரையிலான சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலி : அக்டோபர் 12 முதல் 15 வரையிலான சிறப்பு நிகழ்ச்சிகள்

851
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 வரையில் ராகா வானொலியில் ஒலியேறும் சில சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

திங்கள், 12 அக்டோபர்

உங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட அல்லது படித்த மிக எதிர்மறையான கருத்து?

ராகா, காலை 6-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

இரசிகர்கள் தங்களைப் பற்றி வந்த எதிர்மறையான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இரசிகர்கள் தங்களின் அசாதாரண திறமைகளைக் கொண்ட காணொலியை இன்ஸ்டாகிராமில் #kktalent என்ற ஹேஷ்டேக் மூலம் 12 முதல் 16 அக்டோபர் வரை பதிவேற்றம் செய்வதோடு ராகாவையும் டேக் செய்யலாம்.

இரண்டு சிறந்த காணொலிகள் தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் 16 அன்று அறிவிக்கப்படும். வெற்றியாளர்கள் இருவரும் ராகா ‘கலக்கல் காலை’, அறிவிப்பாளர்களான, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் இணைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும்.

செவ்வாய், 13 அக்டோபர்

நேர்காணல்: மார்பக புற்றுநோயைக் கண்டறிந்த பிறகு வாழ்க்கை எவ்வாறு மாறியது?

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: புற்றுநோய் நோயாளி

மார்பக புற்றுநோயைக் கண்டறிந்த பிறகு அவரது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு புற்றுநோய் நோயாளியின் நேர்காணலை இரசிகர்கள் கேட்கலாம்.

புதன், 14 அக்டோபர்

நேர்காணல்: புற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

விருந்தினர்: புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்

புற்றுநோயுடன் தனது பயணம் மற்றும் நோயை வெல்வதில் தான் வெற்றிப் பெற்றதற்கான நுணுக்கங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் புற்றுநோயிலிருந்து குணமடைந்தவரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்கலாம்.

வியாழன், 15 அக்டோபர்

நேர்காணல்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் சிறந்த வழிகள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

விருந்தினர்: குஹன், வங்கியாளர்

கடன்பற்று அட்டையை (கிரெடிட் கார்டை) புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் முறைகள், கடன் மற்றும் திவால் நிலையைத் தவிர்ப்பது குறித்த குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வங்கியாளரான குஹனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள், அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை