Home One Line P1 அன்வாருக்கு ஆதரவளிக்கும் அம்னோ தலைவர்கள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்

அன்வாருக்கு ஆதரவளிக்கும் அம்னோ தலைவர்கள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்

682
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஆதரிக்கும் எந்தவொரு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகார பேராசையில் இருப்பதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா விவரித்தார்.

பிகேஆர் தலைவர் தன்னுடன் இருப்பதாகக் கூறப்படும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளிப்படுத்த முடியும். இதனால் மக்கள் அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வார்கள்.

“மக்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொவிட்19 தொற்றுக்கு பயப்படும் இந்நேரத்தில், அவர்கள் எவ்வாறு அதிகாரப் பசிக்கு முக்கியத்துவம் அளித்து நாட்டின் நிலைத்தன்மையை அச்சுறுத்த முயற்சிக்க முடியும்.

#TamilSchoolmychoice

“அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் உண்மையான பட்டியல் விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம். இதனால் அவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியும்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வரும் செவ்வாயன்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

இதனிடையே, கடந்த மாதம், புதிய ஆட்சியை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டதாக அன்வார் கூறியிருந்தார். மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்கப்போவதாகக் கூறினார்.

“இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்து விட்டது” என அன்வார் இப்ராகிம் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

எனினும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றளவும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து கருத்துரைத்த, அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி, அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்க அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பப்பட்டால், அதனை தம்மால் நிறுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு அம்னோ தலைவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. அம்னோ நாடாளுமன்றத் தலைவர்கள் சாஹிட்டின் கூற்றுக்கு எதிர்ப்பாகக் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு மத்தியில், அன்வாருக்கு மாமன்னரை சந்திக்கும் வாய்ப்பு அக்டோபர் 13 வழங்கப்பட்டுள்ளது.