Home One Line P1 கொவிட்19 தொற்று ஏற்பட்டால் பள்ளிகள் 7 நாட்கள் மூடப்படும்

கொவிட்19 தொற்று ஏற்பட்டால் பள்ளிகள் 7 நாட்கள் மூடப்படும்

616
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று சம்பவங்கள் இருப்பது கண்டறிப்பட்டால் பள்ளிகள் சுகாதார அமைச்சின் பகுப்பாய்வுக்காகக் காத்திருக்காமல் ஏழு நாட்களுக்கு மூடப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கொவிட்19- ஐ நிர்வகிப்பது தொடர்பான தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்த மூடலின் போது வளாகங்களை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்

#TamilSchoolmychoice

“கொவிட்19 தொற்றைக் கொண்ட பள்ளிகள் கல்வி அமைச்சால் வழங்கப்படும் பள்ளி மூடல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்” என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

“இந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வீட்டிலேயே கற்பித்தல் மற்றும் கற்றலை செயல்படுத்துவதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.” என்று அது கூறியது.

கல்வி அமைச்சின் கீழ் கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கொவிட்19 தொற்றுநோயை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அது வலியுறுத்தியது.