Home One Line P1 ‘அம்னோ தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக இல்லை’- அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

‘அம்னோ தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக இல்லை’- அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

459
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிக்கிறார்கள் என்ற ஊகத்தை நிராகரித்துள்ளனர்.

அண்மையில், அன்வார் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடன்  அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போன்றோர் அன்வாரின் இந்த அறிவிப்பை மறுத்தனர். அம்னோ உதவித் தலைவரான மஹாட்சிர் காலிட், தேசிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதில் தாம் ஈடுபடவில்லை என்று மறுத்தார்.

பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானும் அன்வாரை ஆதரிப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

#TamilSchoolmychoice

தாஜுதடின் தாம் இன்னும் அம்னோவில் இருக்கிறார் என்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கிறார் என்றும் கூறினார். அன்வார் மக்களவையில் தனக்கு கிடைத்த ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தஞ்ஜோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஒமார், “அதிர்ஷ்டவசமாக எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை, இல்லையெனில் நான் மயக்கம் அடைந்திருப்பேன்

“திடீரென்று என் பெயர் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

தி கவரேஜ் இணையத்தளத்தில் சில அம்னோ தலைவர்களின் பெயர் இணைக்கப்பட்டதை அடுத்து இந்த மறுப்பு அறிக்கைகள் வெளி வந்துக் கொண்டிருக்கின்றன.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த மறுப்பு அறிக்கைகள், அன்வாரின் பெரும்பான்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. மேலும், சாஹிட் ஹமிடி, அன்வாருக்கு ஆதரவாக சில அம்னோ, தேசிய முன்னணி நாடாளூமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறியதும் அரசியல் சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, இது குறித்து கருத்துரைத்த, சபா பார்ட்டி சிந்தா (பிசிஎஸ்) தலைவர் அனிபா அமான், அன்வார் இப்ராகிமுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவு இருப்பதாக தாம் நம்பவில்லை என்று  தெரிவித்திருந்தார்.

உண்மையில், சபா மாநிலத் தேர்தல் நடக்க இருப்பதால், அன்வார் நேற்று திடீரென கூறிய பெரும்பான்மை ஆதரவு வெறும் பிரச்சாரம் என்று அனிபா கூறினார்.

“தேர்தலில் பிகேஆருக்கு வாக்குகளைப் பெறுவதற்காக இது கூறப்பட்டது” என்று அவர் கூறினார்.

பிரதமராக மொகிதின் யாசினுக்கு சரவாக் கூட்டணி கட்சி (ஜி.பி.எஸ்) தனது ஆதரவை வெளிப்படுத்தியதால், அன்வாருக்கு வலுவான ஆதரவு கிடைப்பது சாத்தியமில்லை என்றும் அனிபா கூறினார்.

“கணித ரீதியாக, இது சரியல்ல” என்று அனிபா கூறினார்.