Home One Line P1 ‘முவாபாக்காட் நேஷனல் ஒப்பந்தத்தை அம்னோ மீறுகிறது’- பாஸ்

‘முவாபாக்காட் நேஷனல் ஒப்பந்தத்தை அம்னோ மீறுகிறது’- பாஸ்

433
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக பிரதமர் மொகிதின் யாசினுக்கு அளித்த ஆதரவை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திரும்பப் பெறுவது குறித்து அம்னோ விளக்கமளிக்குமாறு பாஸ் கோருகிறது.

இது உண்மையாக இருந்தால், முவாபாக்காட் நேஷனல் சாசனத்தின் கீழ் கட்சிகளின் ஒப்பந்தத்தை அம்னோ மீறுவதாக பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

புதன்கிழமை, அன்வார் இப்ராகிம் வெளியிட்ட கூற்றினை ஆதரித்துப் பேசிய அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடியின் கருத்துக்கு விளக்கம் கோர பாஸ் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புதிய அரசாங்கத்தை உருவாக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது என்று சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

“நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவை தேசிய கூட்டணியின் அங்கக் கட்சிகள் அல்ல. தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே.

“அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முடிவு செய்ததாகவும், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவதை, அம்னோ, தேசிய முன்னணிக்குத் தடுக்க உரிமையில்லை”

“பல அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன், ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.