Home One Line P1 ‘மகாதீர் போல, மொகிதின் பதவி விலக வேண்டும்’-பிகேஆர்

‘மகாதீர் போல, மொகிதின் பதவி விலக வேண்டும்’-பிகேஆர்

611
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வழியைப் பின்பற்றி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிகேஆர் கட்சி இளைஞர் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மொகிதின் யாசினுக்கு போதுமான ஆதரவு நாடாளுமன்றத்தில் இல்லாததை அடுத்து இந்த நடவடிக்கையை அவர் மேற்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தமக்கு ஆதரவு இல்லாததை அறிந்து மகாதீர் பதவி விலகியதாக இளைஞர் அணி உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் கூறினார்.

#TamilSchoolmychoice

அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடியின் கூற்றுபடி, அன்வார் இப்ராகிமுக்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவர் ஆதரவு இழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிட்டதாக நிரூபிக்கப்பட்ட பின்னர் மொகிதின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

அரண்மனையை அடுத்த செயல்முறையை செயல்படுத்த ஏதுவாக பதவி விலகிய முன்னாள் பிரதமரை அவர் பின்பற்ற வேண்டும்” என்று சைட் பாட்லி ஷா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

புதன்கிழமை, பிகேஆர் தலைவரான அன்வார், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்ததை அடுத்து, இப்போது அரசாங்கத்தை அமைப்பதற்கான வலுவான எண்ணிக்கையை வைத்திருப்பதாக அறிவித்தார்.

ஆயினும், அவர்கள் யார் என்ற எண்ணிக்கையை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் முன்னிலையில் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக,இன்று  வெள்ளிக்கிழமை அன்வார் இப்ராகிம் அரண்மனையில் பிரதமராக பதவி உறுதிமொழி எடுப்பார் என்ற புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை இளைஞர் அணியினர் மறுத்துள்ளனர். வெளியான அப்படத்தில் பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி சின்னம் இடம்பெற்றுள்ளது.

அது போலியான படம் என்று இளைஞர் அணி கூறியது.  அப்படத்தில் கட்சித் தலைவரும், இளைஞர் அணியின் சின்னமும் இருப்பதாக அதன் செயலாளர் அகமட் சுக்ரி ராசாப் கூறியிருந்தார்.

“பொறுப்பில்லாதவர்கள் இம்மாதிரியான படங்களை சமூகப் பக்கத்தில் உலாவ விட்டிருப்பதால், மக்கள் அதனை பகிர வேண்டாம். அரசியல் மாற்றத்தைக் கெடுக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.