Home One Line P1 பெஜுவாங், அமானா மொகிதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன

பெஜுவாங், அமானா மொகிதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன

572
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமானா கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக பிரதமராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக அதன் துணைத் தலைவர் ஹசனுடின் முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு கடிதம் வழங்க கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வருவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கட்சி தனது 11 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சமர்ப்பிக்க நிர்பந்திக்கவில்லை என்று ஹசனுடின் கூறினார்.

#TamilSchoolmychoice

“இன்று இவற்றை அனுப்ப நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் பெஜுவாங் கட்சி, அதன் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருப்பதை உறுதிப்படுத்தியது.

மகாதீரைத் தவிர, குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமிருடின் ஹம்சா, முக்ரிஸ் மகாதீர் (ஜெர்லூன்), மஸ்லீ மாலிக் (சிம்பாங் ரெங்காம்) மற்றும் ஷாருடின் முகமட் சல்லே (ஸ்ரீ காடிங்) ஆகியோர் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அமிருடின் ஹம்சா நேற்று தீமானத்தைத் தாக்கல் செய்ததை உறுதிப்படுத்தினார்.