லண்டன், ஜன. 25 – உடல் குண்டாக இருப்பவர்கள் கார் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கார் விபத்துகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் இது குறித்து இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அதிக உடல் எடையுடன் கூடிய குண்டான மனிதர்கள் 80 சதவீதம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் உடல் குண்டான பெண்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகம், மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் இணைந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதேசமயம் குண்டான உடலமைப்பு கொண்டவர்கள் 80 சதவிகிதம் பேர் கார் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்படும் போது டிரைவரின் இருக்கையில் இருக்கும் குண்டானவரின் தசைகளால் உடல்களின் உட்புறத்தில் மோதுகிறது. இதனால் இடுப்பு எலும்பு மற்றும் வயிற்றின் அடிப்பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.