Home கலை உலகம் கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல்

கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல்

682
0
SHARE
Ad

rajani_kamal_200_200சென்னை,ஜன.25பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் திரைப்பட உலகின் சுப்பஸ்டார் ரஜினிகாந்த, கமலஹாசனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை  குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை ரஜினிகாந் எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ;
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.
கமல் எனது 40 ஆண்டு கால நண்பர், யாருடைய மனதையும் புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன்.  இத்திரைப்படம் தணிக்கையான பிறகு
தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததிலிருந்தே,  இஸ்லாமிய சகோதரர்கள் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும்  சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் கமலஹாசன் இந்தப் படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும் போது என் மனம் கலங்குகிறது.
கமலிடம் கலந்து பேசி கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட  உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துகளுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.