Home இந்தியா “எல்லாமே வீணாகிப் போனது”- இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது ரத்து

“எல்லாமே வீணாகிப் போனது”- இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது ரத்து

923
0
SHARE
Ad

india_200_200பாகிஸ்தான்,ஜன.25-இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம்  ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில் கடைசியில் எல்லாமே வீணாகிப் போனது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ( பி.சி.பி.) தலைவர் ஜக்கா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

2008 இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இதன்பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடையில் கிரிக்கெட் தொடர் எதுவும் நடக்கவில்லை. பல்வேறுகட்ட பேச்சு வார்த்தைக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய தொடர் சமீபத்தில் நடந்தது. அப்போது இந்திய அணி பாகிஸ்தான் வரவேண்டுமென பி.சி.பி. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இத்தொடர்  முடிந்த சில நாளில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய இராணுவத்திpனர் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளிடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து பி.சி.பி. தலைவர் ஜக்கா அஷ்ரப் கூறியதாவது;
இந்தியாவில் போட்டிகளில் பங்கேற்றபோது இந்திய கிரிக்கெட் சபையுடன் (பி.சி.சி.ஐ.) மட்டுமன்றி இந்திய அரசு அதிகாரிகளிடமும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்திய அணி பாகிஸ்தான் வருவது ஏறக்குறைய முடிவானது. ஆனால் சமீபத்திய மோசமான நிகழ்வுகள்  அனைத்தையும் வீணடித்துவிட்டன. இரு நாடுகளிலும் உள்ள அமைதியை விரும்பும் மக்கள் இந்தச் சிக்கலை நீக்கி அமைதியை ஏற்படுத்துவரென நம்புவதாக கூறினார்.