Home One Line P2 மெலிந்த தோற்றத்தில் நடிகர் தவசி- சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிர்வு

மெலிந்த தோற்றத்தில் நடிகர் தவசி- சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிர்வு

583
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து வந்த நடிகர் தவசியின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தேனி மாவட்டம் கோணாம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடிகர் தவசி, கிழக்கு சீமை படத்தில் தொடங்கி 25- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்பு காரணமாக மதுரை நரிமேடு பகுதியிலுள்ள சரவணா மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அப்புகைப்படத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு அவரது உடல்  மெலிந்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நகைச்சுவை நடிகர் சூரிக்கு தந்தையாக தவசி நடித்திருப்பார்.

நடிகர் தவசி தனது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இவரது செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் உதவி செய்வதாகக் கூறியுள்ளனர்.

மேலும், அவரது சிகிச்சைக்கான செலவைத் திருப்பரங்குன்றம்
திமுக சட்டமன்ற உறுப்பர் சரவணன் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.