Home கலை உலகம் ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கிறேன்- சூர்யா

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கிறேன்- சூர்யா

755
0
SHARE
Ad

suryaசென்னை, ஏப்ரல் 16- சூர்யா நடிக்கும் “சிங்கம்-2” படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து இரண்டு புதுப்படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து சூர்யா கூறியதாவது:-

கவுதம் வாசு தேவமேனன் இயக்கும் புதுப்படத்தில் அடுத்து நடிக்க உள்ளேன். இப்படத்தை போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது.
ஜுன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும். இத்துடன் லிங்குசாமி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளேன். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
ஆகஸ்டு மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும். இரு படங்களிலும் ஒரே சமயத்தில் நடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கவுதம்மேனன் இயக்கும் படத்துக்கு “துருவ நட்சத்திரம்” என்ற பெயர் வைக்க பரிசீலிக்கப்படுகிறது. இரு படங்களுக்கும் கதாநாயகிகள் உள்ளிட்ட நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது.