Home நிகழ்வுகள் பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்கத்தின் ‘34ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா’

பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்கத்தின் ‘34ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா’

829
0
SHARE
Ad

tamilar-tirunaalபட்டர்வோர்த், ஏப்ரல் 16- தமிழவேள் கோ.சாரங்கபாணி நாடெங்கிலும் முழக்கமிட்ட ‘தமிழர் திருநாள்’ விழாவை எதிர்வரும் 27.4.2013 தேதி பட்டர்வோர்த் டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில்  இரவு 8 மணியளவில், பினாங்கு மாநில முத்தமிழ்ச்சங்கம் விமரிசையாக தனது 34ஆவது ஆண்டு தயாரிப்பாக படைக்கவிருக்கின்றது.

இந்நிகழ்வில் பி.எம்.ஆர், எஸ்.பி.எம், மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

பட்டர்வோர்த் கலை ரஞ்சினி இசை குழுவின் இன்னிசை படைப்பாக பல உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடல்களோடு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து விழாவை சிறப்பிக்க கனிவுடன் அழைக்கின்றோம்.

மேல் விவரங்களுக்கு தலைவர் ‘முத்தமிழ்மணி’ க.உ. இளங்கோவன் 016-5922785 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.