கோலாலம்பூர், ஏப்ரல் 16- அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களுக்கு 13ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பை வழங்கியுள்ளது.
வெளி நாட்டில் வாழும் மலேசியர்கள், முதலில் வாக்காளர்களாக தங்களை பதிந்திருக்க வேண்டும் என்பதோடு, அவர்களின் தற்போதைய வசிப்பிட நாட்டிலும் முறையான ஆவணங்களோடு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரங்களுக்கு சென்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
அந்த வாக்குகள் ஒரு பெட்டியில் (பையில்) சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.