Home உலகம் ஈரான் நிலநடுக்கம் – 100 பேர் பலி?

ஈரான் நிலநடுக்கம் – 100 பேர் பலி?

453
0
SHARE
Ad

img1130416039_1_1ஈரான், ஏப்ரல் 16- பாகிஸ்தான் எல்லையில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஈரான் டிவி 40 பேர் பலியாகியிருக்கலாம் என்று செய்தி வெளியிட அதிகாரபூர்வமற்ற தகவல்கள் சாவு எண்ணிக்கை நூறாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

செய்தி ஏஜென்சி ஒன்றிற்கு ஈரான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளின் மிகப்பெரிய பூகம்பமாகும் இது. எனவே சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும்  என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு 6.3 ரிக்டர் அளவில் பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது.