Home One Line P1 ஜாலான் யூனிவெர்சிட்டி, ஜாலான் பிரொபெசர் உங்கு அசிஸ்சாக பெயர் மாற்றம் காண்கிறது

ஜாலான் யூனிவெர்சிட்டி, ஜாலான் பிரொபெசர் உங்கு அசிஸ்சாக பெயர் மாற்றம் காண்கிறது

551
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் யுனிவர்சிட்டியை ஜாலான் பிரோபெசர் டிராஜா உங்கு அசிஸ் என்ற பெயருக்கு மாற்ற ஒப்புக்கொண்டார்.

சுல்தானின் தனியார் செயலாளர் முகமட் முனீர் பானி, மறைந்த பேராசிரியர் உங்கு அசிஸ்சின் பெயரை மாற்ற சுல்தான் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.

“ஜாலான் யூனிவெர்சிடியை, ஜாலான் பிரோபெசர் டிராஜா உங்கு அசிஸ் என்று மாற்றுவது பொருத்தமானது, ஏனெனில் மலாயா பல்கலைக்கழகம், அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம், மஹ்சா பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி கற்கும் நிறுவனங்களுக்கு முக்கிய நுழைவாயிலாக இது உள்ளது,” என்று அவர் இன்று சிலாங்கூர் அரண்மனை அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உங்கு அசிஸ் கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் டிசம்பர் 15 அன்று காலமானார்.