Home One Line P1 புத்தகம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க டோமி தோமஸ் தயார்

புத்தகம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க டோமி தோமஸ் தயார்

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸின் நினைவுக் குறிப்பு தொடர்பாக மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக 100- க்கும் மேற்பட்ட காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அவரது வழக்கறிஞர் சங்கீத் கவுர் கூறுகையில், தனது வாடிக்கையாளர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக உறுதியளித்தார் என்றார்.

“சாட்சியமளிக்க முழு ஒத்துழைப்பை வழங்க எங்கள் வாடிக்கையாளரின் விருப்பங்களை வெளிப்படுத்த நாங்கள் காவல் துறை தலைவருக்கு (அப்துல் ஹமீட் பாடோர்) ஒரு கடிதம் எழுதியுள்ளோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், தோமஸின் வாக்குமூலத்தை எப்போது எடுப்பார்கள் என்று காவல் துறை இதுவரை தெரிவிக்கவில்லை என்று சங்கீத் கூறினார்.

ஏதேனும் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “இன்னும் இல்லை” என்று பதிலளித்தார்.

நேற்று, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட், ‘மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் டி வைல்டர்னஸ்’ என்ற தலைப்பில் 134 புகார்களை நாடு முழுவதும் இருந்து காவல் துறையினர் பெற்றுள்ளனர்.

அல்தான்துயாவின் கொலையில் நஜிப்பின் தொடர்பு குறித்த ஆதாரங்களை சிறுல் அளித்ததாக தோமஸ் தனது நினைவுக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நினைவுக் குறிப்பு தொடர்பாக, கெராக்புடாயா வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர் சோங் டன் சின், காவல் துறையால் விசாரிக்கப்பட்டதாக மலேசியாகினி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

புத்தகம் தடைசெய்யப்படுவதற்கான வாய்ப்பை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.