Home One Line P1 அப்துல் அசிஸ் சகோதரர் விடுதலையின்றி விடுவிப்பு

அப்துல் அசிஸ் சகோதரர் விடுதலையின்றி விடுவிப்பு

581
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல் லத்தீப் அப்துல் ரகிம் இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 8) விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

பேராக் மற்றும் கெடாவில் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்கள் மற்றும் சாலை மேம்பாடுகள் தொடர்பாக  இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

துணை அரசு வழக்கறிஞர் அடாம் முகமட், அப்துல் லத்தீப்பை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை அடுத்து அமர்வு நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி இந்த முடிவை எடுத்தார்.

#TamilSchoolmychoice

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் அசிஸ், பேராக் மற்றும் கெடாவில் சாலைத் திட்டங்கள் தொடர்பான 5.2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதன் பேரில் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளையும், பணமோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

அவரது சகோதரர், அப்துல் லத்தீப், மெனுஜு அசாஸ் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு இந்த குத்தகையைப் பெற, 4 மில்லியனைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.