Home One Line P1 எஸ்பிஎம் தேர்வு வடிவத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது

எஸ்பிஎம் தேர்வு வடிவத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது

434
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் எஸ்பிஎம் தேர்வு வடிவத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று மலேசிய தேர்வு வாரியம் இன்று தெளிவுபடுத்தியது.

எதிர்கால எஸ்பிஎம் தேர்வுகளின் வடிவத்தில் கூறப்படும் மாற்றங்கள் குறித்த செய்தி அறிக்கை உண்மை இல்லை என்றும், இந்த விவகாரம் குறித்து வாரியம் ஒருபோதும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் அது கூறியது.

மலாய் மொழி செய்தித்தாளில் வெளியான செய்தியினால், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிப்ரவரி 22 முதல் 2020 எஸ்பிஎம் தேர்வுகளுக்கு அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

“எஸ்பிஎம் தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையின் வடிவத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு தெரிவிக்கும்” என்று அது கூறியது.

நேற்று, “வாஜா பாரு எஸ்.பி.எம்” என்ற தலைப்பில் முதல் பக்க செய்தி அறிக்கையை சினார் ஹாரியான் வெளியிட்டது. மேலும், வடிவமைப்பில் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவரங்களையும் அது வழங்கியது.