Home One Line P1 நம்பிக்கை கூட்டணியால் ஆர்யூயூ355 சட்டத்தை நிறைவேற்ற இயலாது

நம்பிக்கை கூட்டணியால் ஆர்யூயூ355 சட்டத்தை நிறைவேற்ற இயலாது

451
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1965- ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற (குற்றவியல் அதிகார வரம்பு) சட்டம் அல்லது ஆர்யூயூ355 திருத்தத்தை அமல்படுத்துவதை நம்பிக்கை கூட்டணியிடம் எதிர்பார்க்க முடியாது என பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பாட்லி ஷாரி கூறினார்.

இந்த விவகாரத்தில் பாஸ் தலைவர்களிடமிருந்து ஏன் வற்புறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று அளித்த அறிக்கை குறித்து அகமட் பாட்லி கருத்து தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரை, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டது ஏற்கப்படுகிறது. ஏனெனில் ஷரியா சட்டத்தை மேம்படுத்துவதில் தீவிரமான ஒரு கட்சியாக பாஸ் கட்சியை அவர் அங்கீகரிப்பதை இது காட்டுகிறது.

#TamilSchoolmychoice

“நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மாறியபோது இதே கேள்வி கேட்கப்படவில்லை, ஏனென்றால் நம்பிக்கை கூட்டணியால் இதனை செய்ய இயலாது என்பது அனைவருக்கும் தெரியும். அது அரசாங்கமானபோது கூட, அச்சட்டம் அவர்களுடைய கட்சித் திட்டத்தில் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது, சில நபர்களை பிரதமராக கொண்டு வருவதை உறுதி செய்வதாகும், ” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

நேற்று, சைபுடின் தனது முகநூலில் ஆர்யூயூ355 தொடர்பாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஏன் அழுத்தம் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.