பெய்ஜிங்: சீன ஊடகங்களும், மக்களும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
வடமேற்கு பிராந்தியத்தில் பருத்தி உற்பத்தியில் உய்குர் இனத்தினர் கட்டாய உழைப்புக்காகப் பயன்படுத்தப்படுவதை மேற்கத்திய தயாரிப்பு நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.
எச் அண்ட் எம் மற்றும் ‘நைக்’கிற்கு எதிராகத் தொடங்கிய பிரச்சாரம் இப்போது, புர்பெர்ரி, அடிடாஸ் மற்றும் கன்வர்ஸ் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
பல மேற்கத்திய நாடுகள் சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த சிறிது நேரத்திலேயே இந்த போராட்டம் தொடங்கியது.
சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெய்ஜிங் இதை மறுக்கிறது. மேலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.