Home One Line P1 ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்” – இரா.முத்தரசன் பங்கு பெறுகிறார்

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்” – இரா.முத்தரசன் பங்கு பெறுகிறார்

565
0
SHARE
Ad

கோலாலம்பூர் : திங்கட்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை வரையில் ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் (அலைவரிசை எண் 201) ஒளியேறிவரும் வருகிறது “விழுதுகள் – சமூகத்தின் குரல்” என்ற நிகழ்ச்சி.

பலதரப்பட்ட சமூக, அரசியல் விவகாரங்களை அலசி, பங்கேற்பாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையக் காலங்களில் தொலைக்காட்சி இரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 5) இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் விழுதுகள் நிகழ்ச்சியில் நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த கலந்துரையாடல் இடம் பெறுகிறது.

#TamilSchoolmychoice

இன்றைய விழுதுகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களின் அரசியல் களம், கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள், முன்னணி தலைவர்களின் வெற்றி வாய்ப்புகள்,  இந்தத் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்டும் அரசியல் வியூகங்கள் என பலதரப்பட்ட அம்சங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்.