Home இந்தியா நரேந்திர மோடியை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா பானர்ஜி

நரேந்திர மோடியை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா பானர்ஜி

539
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் நீடிக்கும் அரசியல் பகைமை அனைவரும் அறிந்ததுதான்.

அவர்களுக்கிடையிலான மோதல் இன்று வெள்ளிக்கிழமை (மே 28) பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தியாவின் சில மாநிலங்களைத் தாக்கிய யாஸ் புயல் ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிடுவதற்காக மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மெதினிபுர் மாவட்டத்திலுள்ள களைகுண்டா பகுதிக்கு மோடி வருகை தந்தார். அப்போது அங்கு அவரை மம்தா பானர்ஜி சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும் அந்த சந்திப்புக்கு மம்தா அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். அதுவரையில் மோடி அவருக்காகக் காத்திருந்தார். அந்தச் சந்திப்பைப் புறக்கணிக்கும் நோக்கில் மற்றவர்களோடு மோடியைச் சந்திக்காமல் தனியே நேருக்கு நேர் சந்தித்து விட்டு ஓர் அறிக்கையை மோடியின் கையில் கொடுத்து விட்டு மம்தா சென்று விட்டார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வராமல் மம்தா சொந்த அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நடத்துகிறார் என அவர் மீதான கண்டனக் கணைகள் இதனால் பாய்ந்துள்ளன.