Home நாடு மகாதீரின் பெஜூவாங் மீண்டும் பக்காத்தானுடன் இணையாது

மகாதீரின் பெஜூவாங் மீண்டும் பக்காத்தானுடன் இணையாது

874
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தனது கட்சியான பெஜூவாங் இன்னும் மலேசிய சங்கப் பதிவதிகாரியின் அங்கீகாரத்தைப் பெறாத நிலையில், தொடர்ந்து தனித்தே இயங்கி வரப் போவதாகவும், மீண்டும் பக்காத்தான் ஹாராப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைவதற்கு ஆர்வமில்லை என்றும் துன் மகாதீர் தெரிவித்தார்.

15-வது பொதுத் தேர்தல் வரை தனித்தே இயங்கப் போவதாகவும் அதுவரையில் சங்கப் பதிவதிகாரியின் அனுமதி கிடைக்காவிட்டால் ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியுடனும், சைட் சாதிக் தொடங்கியிருக்கும் மூடா கட்சியுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் மகாதீர் அறிவித்திருக்கிறார்.