Home உலகம் ஈரோ 2020 : பெல்ஜியம் 2 – பின்லாந்து 0

ஈரோ 2020 : பெல்ஜியம் 2 – பின்லாந்து 0

1433
0
SHARE
Ad

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (இரஷியா) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “பி” பிரிவில் பின்லாந்தும், பெல்ஜியமும் மோதின.

இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் பின்லாந்தைத் தோற்கடித்ததன் மூலம் பெல்ஜியம் அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

#TamilSchoolmychoice

“பி” பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது பெல்ஜியம். இரண்டாவது இடத்தை டென்மார்க் பிடித்திருக்கிறது.

அந்தப் பிரிவில் 3 புள்ளிகளுடன் மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது டென்மார்க்.

திங்கட்கிழமை நடைபெற்ற (ஜூன் 21) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்: