Home கலை உலகம் ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் சேவை இடையூறு நீடிக்கிறது

ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் சேவை இடையூறு நீடிக்கிறது

630
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்னும் ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் சேவையின் இடையூறு நீடிப்பதாக ஆஸ்ட்ரோ தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

சிக்கலை முழுமையாக சரிசெய்ய அதிக நேரம் தேவை என்று செயற்கைக்கோள் வழங்குநரால் ஆஸ்ட்ரோவுக்கு அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சில அலைவரிசைகளை அடையாளம் கண்டு சரிசெய்ய ஆஸ்ட்ரோவின் தொழில்நுட்ப குழு விரைவில் செயல்படுவதாக அது கூறியது.

#TamilSchoolmychoice

அந்தந்த ஆஸ்ட்ரோ அலைவரிசைகளை அணுகுவதில் சிரமம் உள்ள வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ ‘கோ’வில் நேரடியாக உலாவலாம் என்று அது மேலும் கூறியுள்ளது.