Home No FB காணொலி : 6-ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் வழிகாட்டி (பகுதி 2) – 2021 தமிழ்ப்...

காணொலி : 6-ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் வழிகாட்டி (பகுதி 2) – 2021 தமிழ்ப் பள்ளிகளுக்கான மதிப்பீட்டுத் தேர்வு

948
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | 6-ஆம் வகுப்பு தமிழ் மொழி இலக்கணம் வழிகாட்டி (பகுதி 2) | 2021 தமிழ்ப் பள்ளிகளுக்கான மதிப்பீட்டுத் தேர்வு : 11 ஜூலை 2021
Selliyal Video | Std 6 Tamil Grammar Guide (Part 2) | 2021 Assessment Test for Tamil Schools | 11 July 2021

2021-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டாலும், தமிழ்ப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் பள்ளிகள் அளவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளில் தமிழ் மொழி இலக்கணத்திற்கான வழிகாட்டியாக, மேற்கண்ட செல்லியல் காணொலியின் இரண்டாவது நிறைவுப் பகுதியின் வழி சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம்.

#TamilSchoolmychoice

6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான தமிழ் மொழி இலக்கண வழிகாட்டி காணொலியின் முதல் பாகம் நேற்று சனிக்கிழமை செல்லியல் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் கண்டது.

அதைத் தொடர்ந்து மேற்கண்ட 2-வது பகுதி காணொலி இன்று இடம் பெறுகிறது.

இந்தக் காணொலிகளை வழங்கியிருக்கும் விக்னேஸ்வரி சாம்பசிவம், வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூலைப் படைத்தவர் என்பதோடு நீண்ட காலமாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வந்திருப்பவராவார்.