Home இந்தியா மனித கணினி என புகழப்படும் கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.

மனித கணினி என புகழப்படும் கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.

1224
0
SHARE
Ad

sagunthalaபெங்களூர், ஏப்ரல் 22- மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

தனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.

1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

பெங்களூரில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி நேற்று மரணமடைந்தார்.