Home இந்தியா இராமேஸ்வரம் மீனவர்கள் கைது – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

603
0
SHARE
Ad

சென்னை : தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இராமேஸ்வரம் சுற்றுவட்டாரத்திலுள்ள மீனவர்கள் 55 பேரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 68 பேரை விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று புதன்கிழமை (டிசம்பர் 22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.