Home உலகம் கொவிட் 19 : இஸ்ரேல் 4 தடுப்பூசிகள் போடும் முதல் நாடு

கொவிட் 19 : இஸ்ரேல் 4 தடுப்பூசிகள் போடும் முதல் நாடு

964
0
SHARE
Ad

ஜெருசலம் : உலகின் பல நாடுகள் 3-வது கொவிட் தடுப்பூசிக்குத் தயாராகி வரும் நிலையில் இஸ்ரேல் 4-வது தடுப்பூசியைத் தனது குடிமக்களுக்கு செலுத்த தயாராகியுள்ளது.

புதிய ஓமிக்ரோன் திரிபடைந்த நச்சுயிரிப் பரவலைத் தொடர்ந்து, முன்களப் பணியாளர்களுக்கும், 60-வயதைக் கடந்தவர்களுக்கும் 4-வது தடுப்பூசி செலுத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை ஓமிக்ரோன் தொற்றால் முதல் நபர் இஸ்ரேலில் மரணமடைந்தார். மேலும் சுமார் 340 ஓமிக்ரோன் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்தே 4-வது தடுப்பூசி போடும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது.