சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.
சிவாலயங்களில் சைவக் குரவர் நால்வருள் ஒருவரான, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவை பாடல்களைக் கூடிப் பாடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருவெம்பாவை 20 பாடல்கள் கொண்டுள்ளது. தேன் தமிழில் இனிமையாக வடித்துள்ளார் நமது மாணிக்கவாசகப் பெருமான்.
இசை முரசு இளவரசு நெடுமாறன் இசைக் கோர்வையில் நாட்டின் முன்னணி கலைஞர்களான கீபோர்ட் மோசஸ், குழல் : கேசவன், மிருதங்கம் பிரதாப் ஷர்மா ஆகியோர் பின்னணி வழங்கியுள்ளனர்.
பாடகர்களுக்கு அருள் நுண்கலைப் பள்ளி முதல்வர் திருமதி அல்லிமலர் மனோகரன் அவர்கள் குரல் பயிற்சி வழங்கியுள்ளார். கலை வளர் கோயில் நடனப்பள்ளியைச் சேர்ந்த திருமதி அருளரசி ரூபன், தமிழரசி முருகன் ஆகியோர் அபிநயம் வழங்கியுள்ளனர்.
இப்பாடலின் காணொலி எதிர்வரும் 25.12.2021ஆம் நாள் சனிக்கிழமை வைகறை ஸ்டூடியோஸ் யூடியுப் சேனலில் வெளியீடு காணவுள்ளது. எனவே இந்தக் காணொலியைத் தவறாமல் கண்டு, கேட்டு மகிழுங்கள்.
இதற்கான இணைப்பு :