Home இந்தியா நரேந்திர மோடி தாயாரின் 100-வது பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து

நரேந்திர மோடி தாயாரின் 100-வது பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து

631
0
SHARE
Ad

சென்னை : நேற்று சனிக்கிழமை (ஜூன் 18) நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அதனை முன்னிட்டு குஜராத் அகமதாபாத்திலுள்ள தனது தாயாரின் இல்லத்திற்கு வருகை தந்த நரேந்திர மோடி, தனது தாயாரின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்தார்.

மோடியின் தாயாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே, தங்கள் தாயார் தமது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாய் மீதான தங்கள் பாசத்தை நான் நன்கறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரிப்பதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். இந்தச் சிறப்பான நாளில், தங்கள் தாயாருக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” – என ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.