ஒரு சமயத்தை இழிவுப்படுத்தி பேசிய சுல்கிப்ளி மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை அரவணைத்து தொகுதி வழங்கியிருப்பது இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சார்லஸ் சந்தியாகோ, கோத்தா அலாம் ஷா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கணபதிராவ், போர்ட் கிள்ளானில் போட்டியிடும் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் ஆகியோரை ஆதரித்து லிம் இன்று உரை நிகழ்த்தினார்.
பண்டமாரான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.