Home கலை உலகம் விஜய், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தந்தையைச் சந்தித்தார்

விஜய், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தந்தையைச் சந்தித்தார்

398
0
SHARE
Ad

சென்னை : கடந்த சில மாதங்களாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்க்கும் இடையில் நீடித்து வந்த பிணக்கு இன்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது.

இயக்குநரும் நடிகருமான சந்திரசேகர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்க – அதற்கேற்ப அவரும் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

தனக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையும் தான் குணமடைந்து நலமுடன் இருப்பதையும் நண்பர்களிடம் குரல் பதிவாக பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இதை அறிந்த விஜய் நேற்று வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும் தந்தையைச் சந்தித்து, பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இன்று முழுவதும் இந்தப் புகைப்படமும் அதுகுறித்த செய்திகளும் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

நீண்ட காலமாக தந்தையுடன் பிணக்கு கொண்டு அவருடன் பேசாமல் இருந்தார் விஜய் என்பது பகிரங்கமாக தெரிந்த ஒன்றுதான்.

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சந்திரசேகர் கலந்து கொண்டாலும் அவருடன் விஜய் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளை யாரும் காணவில்லை.

தந்தையை அறுவைச் சிகிச்சைக்குப் பின் விஜய் சென்று சந்தித்திருக்கும் நெகிழ்ச்சியான சம்பவத்தால் விஜய்க்கு அவரின் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.