Home உலகம் புடின் மீண்டும் ரஷிய அதிபராகத் தேர்வு

புடின் மீண்டும் ரஷிய அதிபராகத் தேர்வு

368
0
SHARE
Ad

மாஸ்கோ : ரஷிய அதிபருக்கானத் தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 88 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புடினின் தீவிர அரசியல் எதிரியான அலெக்சல் நவால்னி சிறையில் கொல்லப்பட்ட நிலையில் புடினை எதிர்த்து செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் யாரும் நிற்கவில்லை.

உக்ரேன் போரைத் தீவிரமாக நடத்தி வரும் புடின், பெற்றிருக்கும் புதிய வெற்றியைத் தொடர்ந்து உக்ரேன் போரை மேலும் கடுமையாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.